நோரெத்திஸ்டெரோன் என்பது, பெண்களில் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக ஏற்படும் அசாதாரண பிறப்புறுப்பு இரத்தம், வலி மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு செயற்கை புரோஜெஸ்டின் ஆகும்.
இது மனிதனால் உருவக்கபட்ட இயற்கையான ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோனைப் போன்றது.
நோரெத்திஸ்டெரோன் மாத்திரை பயன்கள்
- மாதவிடாய் முன் நோய்க்குறி (PMS) சிகிச்சை
- மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு சிகிச்சை
- அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு சிகிச்சை
- எண்டோமெட்ரியோசிஸ் சிகிச்சை
நோரெத்திஸ்டெரோன் மாத்திரையை எவ்வாறு பயன்படுத்துவது
உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில், உணவு உண்பதற்கு முன் அல்லது உணவு உண்ட பின் நோரெத்திஸ்டெரோன் மாத்திரையை எடுத்துக்கொள்ளவும்
ஒரு கண்ணாடி கோப்பை அளவு தண்ணீருடன் மாத்திரையை முழுவதுமாக விழுங்கவும், மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ வேண்டாம்
நோரெத்திஸ்டெரோன் எவ்வாறு வேலை செய்கிறது
நோரெத்திஸ்டெரோன் இயற்கையான புரோஜெஸ்ட்டிரோனின் (பெண் ஹார்மோன்) விளைவுகளைப் பிரதிபலிப்பதன் மூலம் செயல்படுகிறது.
நோரெத்திஸ்டெரோன் கருப்பை புறணியின் வளர்ச்சி மற்றும் உதிர்தலை ஒழுங்குபடுத்த உதவுகிறது, இதன் மூலம் மாதவிடாய் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
கர்ப்ப கால தொடர்பு
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நோரெத்திஸ்டெரோன் மாத்திரைகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல.
இது குறித்து ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை அணுகவும் ஏனெனில் அது உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பற்றது.
நோரெத்திஸ்டெரோன் பக்க விளைவுகள்
- தலைவலி
- மார்பக மென்மை
- குமட்டல்
- வாந்தி
- வயிற்று தசைப்பிடுப்புக்கள்
- முடி உதிர்தல்
பாதுகாப்பு
- மாதவிடாய் காலத்திற்கு இடையில் இரத்தப்போக்கு அல்லது புள்ளிகள் ஏற்படக்கூடும். இது அடிக்கடி ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்
- கடுமையான தலைவலி, குத்தும் வலி, காலில் வீக்கம், சுவாசிக்கும் போது வலி, தோல் மஞ்சள் நிறமாக மாறுதல், பார்வை அல்லது கேட்கும் திறனில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால் நோரெத்திஸ்டெரோன் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டு, உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்
- இந்த மருந்தை உட்கொள்ளும் போது கர்ப்பத்தைத் தடுக்க ஆணுறை போன்ற ஹார்மோன் அல்லாத கருத்தடை முறையைப் பயன்படுத்தவும், ஏனெனில் இது ஒரு கருத்தடை மருந்து அல்ல
தற்காப்பு நடவடிக்கைகள்
- மது அருந்துவதை தவிர்க்கவும் ஏனெனில் அது பக்க விளைவுகளை அதிகரிக்கும்
- நீங்கள் எப்போதாவது ஒரு முறை மருந்தளவை தவறவிட்டால் கூடிய விரைவில் அதனை எடுத்துக் கொள்ளுங்கள்
- அடுத்த மாத்திரையை எடுத்து கொள்ள நேரம் ஆகிவிட்டால், தவறிய மருந்தளவைத் தவிர்த்துவிட்டு, பரிந்துரைக்கப்பட்டபடி உங்கள் வழக்கமான அட்டவணையைப் பின்பற்றவும், மருந்தளவை இரண்டு மடங்கு எடுத்துக்கொள்ளாதீர்கள்
- நோரெத்திஸ்டெரோன் மருந்து குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. இது சம்பதமான சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்
கீழ்வரும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டால், நோரெத்திஸ்டெரோன் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்
- வலிப்பு எதிர்ப்பு மருந்துகள்
- நுண்ணுயிர் எதிர்ப்பிகள்
- இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள்
- இரத்தச் சர்க்கரைக் குறைக்கும் மருந்துகள்
- புற்றுநோய் எதிர்ப்பு மருந்து
- வைரஸ் தடுப்பு மருந்து
- பூஞ்சை எதிர்ப்பு மருந்து
மருந்து நோய் தொடர்பு
உங்களுக்கு
- இரத்த உறைவு
- பக்கவாதம்
- மாரடைப்பு
- கடுமையான கல்லீரல் நோய் அல்லது கல்லீரல் கட்டிகள்
- யோனி இரத்தப்போக்கு
- ஹார்மோன்-உணர்திறன் புற்றுநோய்கள்
- மனச்சோர்வு அல்லது மனநிலை கோளாறுகளின் வரலாறு
- உயர் இரத்த அழுத்தம்
- நீரிழிவு நோய்
- இருதய நோய்
மற்றும் அதிக கொழுப்பு இருந்தால் நோரெத்திஸ்டெரோன் எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
விவரங்கள்
- இரசாயன வகுப்பு: புரோஜெஸ்ட்டிரோன் கன்ஜெனர்கள், புரோஜெஸ்டின்கள் (முதல் தலைமுறை)
- போதை பழக்கத்தை உருவாக்கும் மருந்து : இல்லை
- சிகிச்சை வகுப்பு : பெண்ணோயியல்
- அட்டவணை “எச்” பரிந்துரைக்கப்பட்ட மருந்து : பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் சமீபத்திய முறையான பரிந்துரை இல்லாமல் இந்த மருந்தை சில்லறை மருத்துவக் கடைகள் அல்லது ஆன்லைன் மருந்தகங்களில் விற்கக்கூடாது.
- ஒளி மற்றும் ஈரப்பதம் இல்லாத இடத்தில் மருந்தை வைக்கவும்
- குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்
எந்தவொரு உடல்நலம், மருத்துவ நிலை, நோயறிதல் அல்லது சிகிச்சை குறித்து எப்போதும் மருத்துவரை அணுகவும்.
உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள், இந்தத் தளத்தில் நீங்கள் பார்த்த அல்லது படித்தவற்றின் காரணமாக அதைப் புறக்கணிக்காதீர்கள்.