இணையத்தில் பாட விற்பனையாளர்கள் பயன்படுத்தும் போலி மதிப்புரைகள்


5/5 - (1 vote)

இணையம் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது. சாட் ஜி.பி.டி (Chat GPT), கிளாட் (Claude), டீப் சீக் (Deep Seek), பெர்ப்ளெக்ஸிட்டி (Perplexity), கிராக் (Grok) என்று அழைக்கப்படும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த  மாற்றங்களின் காலகட்டத்தை பயன்படுத்தி  இணையத்தில் இருக்கும்  பயனர்களை ஏமாற்ற  தனி  நபர்களும்  நிறுவனங்களும்  உருவாகியுள்ளன


இணையத்தில் விற்கப்படும் போலி பாடத்திட்டங்கள் மற்றும் சேவைகள்

இன்று இணையத்தில் இருப்பவர்கள் பெரும்பாலாக தங்களை நிபுணர்கள் அல்லது வல்லுநர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்

நிறைய மாற்றங்கள் நடக்கும் துறைகளையும், பொய்யாக உருவாக்கப்பட்ட பாடங்களையும் விற்று இணையதள வாசிகளை ஏமாற்றுகின்றன

இக்காலகட்டத்தில் மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்று உணராத வகையில் பல நேரங்களில் ஏமாற்று வேலைகள் இணையத்தில் அரங்கேற்றப்படுகின்றன.

இணையத்தில் கீழ் வரும் விஷயங்களை தீவிர ஆராய வேண்டும்

  • கடவுள் பேரைச் சொல்லி அதை வைத்து இணையத்தில் பணம் பறித்தல்
  • பிரார்த்தனை அல்லது பரிகாரம் செய்கிறோம் என்று கூறி ஏமாற்றுதல்
  • வழிபாடுகள் செய்தால் செல்வங்கள் கிடைக்கும் என்று கூறுபவர்கள்
  • நல்ல எண்ணங்களை எப்படி வெளிகாட்டி (Manifestation) வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை தீர்த்துக் கொள்வது என்று பணம் பறிக்கும் மோசடியாளர்கள்

இப்படிப்பட்ட மோசடியாளர்கள் தங்களைப் பற்றி ஒரு மாய பிம்பத்தை கட்டமைத்து ஏமாற்றும் வகையானவர்கள்

மற்றொரு வகை திறன்களையும், பாடத்திட்டங்களையும் போலியாக விற்பனை செய்து ஏமாற்ற முயற்சிப்பவர்கள்

  • செயற்கை நுண்ணறிவு கருவிகளை (AI Tools) எப்படி பயன்படுத்துவது
  • தொழில்நுட்பக் குறியீடு (Coding) பயிற்சிகள்
  • கிரிப்டோ கரன்சி (Crypto Currency)
  • வர்த்தகம் (Trading)
  • பங்குச்சந்தையில் முதலீடு செய்தல்
  • நாங்கள் கற்றுத் தரும் திறன்கள் உங்களை லட்சங்கள் சம்பாதிக்கும் வெளிநாட்டு வேலைகளில் அமர்த்தும் என்று கூறி ஏமாற்றுபவர்கள்
  • வேலைக்கே செல்லத் தேவையில்லை வீட்டிலேயே சம்பாதிக்கலாம் என்று கூறி ஏமாற்றுபவர்கள்
  • ஆன்லைன் விளம்பரங்கள், பேஸ்புக் விளம்பரங்கள், கூகுள் விளம்பரங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Online Ads & Digital Marketing) கற்றுத் தருவதாக ஏமாற்றுபவர்கள்
  • சமூக வலைதளங்களை பின்பற்றுவர்களை சேர்த்துக்கொண்டு (Social Media Influencers) வணிக உரிமையாளர்களை ஏமாற்றுபவர்கள்
  • உடற்பயிற்சி கற்றுத் தருவதாக கூறி புரத தூள் (protein powder) மற்றும் மருந்துகள் விற்கும் பயிற்சியாளர்கள்

இவை அனைத்தும் சராசரியான வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்கும் மக்களையும், வேலை தேடும் இளைஞர்களையும் குறிவைத்து நடத்தப்படும் பிரச்சார விற்பனைகள் ஆகும்


போலியான சமூக ஊடகவியலாளர்களை எவ்வாறு அடையாளம் காண்பது?

மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இணையத்தில் வலம் வரும் பயிற்சியாளர்கள் அனைவரும் தங்களை பின்தொடர்புகளை மனிதர்களாக பார்க்க மாட்டார்கள், அவர்களை ஒரு புள்ளி விவரமாகத்தான் கருதுவார்கள்

இவர்களை அடையாளம் காண்பது சுலபமான விஷயம் அல்ல. கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய சில அடையாளங்கள்

  • அவர்கள் விற்கும் பாடத்திட்டத்தில் முன் அனுபவமோ அல்லது ஒரு நிபுணருக்கான பின்புலமோ இல்லாத இருத்தல்
  • ஒரு பக்க இணையதளத்தை கொண்டு அதில் போலியான சில சான்றுகளை அவர்களே உருவாக்கி அதில் ஒரு கட்டணம் நுழைவு வாயில் இருத்தல்
  • சமூக ஊடகங்களில் போலியாக பின்பற்றுவோர் விவரங்கள் மற்றும் பக்கங்கள் வைத்துக் கொண்டிருப்பவர்கள்
  • உங்களுக்கு அவர்கள் செய்யும் சேவை புரியவில்லை என்றாலும் தெரியவில்லை என்றாலும் நீங்கள் கட்டிய பணம் திருப்பி தரப்படாது என்று கொள்கையில் இருத்தல்
  • அவர்கள் சேவைகளை மதிப்பாய்வு செய்த நபரின் பெயர் மற்றும் புகைப்படம் இணையத்தில் வேறு யாரோ தெரியாத ஒரு நபருடையதாக இருத்தல்
  • யூடியூபில் யாரோ ஒரு  நிபுணரின் காணொளிகளை எடுத்து அதை தங்களது  பயிற்சி காணொளிகள் என்று கூறி ஏமாற்றுதல்

சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் இணைய மோசடி 

ஒரு ஆன்லைன் சந்திப்புக்கு (online meeting or webinar) உங்களை  இலவசமாகவோ அல்லது  ரூ 99 கட்டணம் பெற்று வரவழைத்து உங்கள் மின்னஞ்சல்  முகவரியையும் அலைபேசி எண்ணையும்  பெற்றுக் கொள்வது

பின்பு அந்த மின்னஞ்சல் முகவரி உங்கள் அலைபேசி எண்ணையும் பயன்படுத்தி உங்களுக்கு மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் ஆயிரம் முதல் பல லட்சம் மதிப்புள்ள பாடத்திட்டத்தை விற்பனை செய்கிறோம் எனக்கூறி மோசடி செய்வதுதான்

இன்று இவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாகிவிட்டது ஏனெனில் இவர்கள் அனைவருக்கும் கூட்டு சேர்ந்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்

ஒரு சராசரியான மாணவன் இணையத்தில் போலியாக பாடம் விற்பவர்களை (course sellers) பின்பற்றும் போது அவர்கள் கற்றுக் கொடுக்கக்கூடிய விஷயங்கள் என்னவென்றே அவனுக்கு புரியாது

அவர்கள் கற்றுக் கொடுக்கும் தொழில்நுட்பம் சந்தைக்கு வந்தே ஓரிரு வருடங்கள் தான் ஆகியிருக்கும் அதை பற்றி இளைஞர்களுக்கு எந்த புரிதலும் இருக்காது, ஆனால் அதை தெரிந்து கொண்டால் வேலை கிடைக்கும் என்று நம்புவார்கள்

இதில் மோசடி என்னவென்றால் அந்த தொழில்நுட்பத்தை சொல்லிக் கொடுப்பவனுக்கே அதைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரிந்து இருக்காது

அவன் தெரிந்ததை சொல்லிக் கொடுப்பான், மாணவர்கள் அதையே சரியான வழிகாட்டியாக கற்றுக் கொள்வார்கள்

இதனால் மாணவர்கள் பணத்தையும் இழந்து விடுவார்கள், உண்மையிலேயே தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு விட்டோம் என்று தவறாக நினைத்து கொண்டிருப்பார்கள்

பின்பு ஏதோ ஒரு காலகட்டத்தில் தான் அனைத்தும் பொய் என்று புரியும்


சமூக ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து பாட விற்பனையாளர்கள் நடத்தும் சமீபத்திய மோசடிகள்

இது போன்று இளைஞர்களையும், மாணவர்களையும் ஏமாற்றும் மோசடியாளர்கள் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பெரும் பதவியிலும் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் சமூக ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து சிறந்த தொழில்நுட்ப தந்திரங்களை கையாளுகிறார்கள்.

இவர்கள் நீங்கள்  ஆன்லைன் சந்திப்புக்கு கட்டும் ரூ 99 முதல் 199  வரையிலான கட்டணத்தை பயன்படுத்தி வேறு சில மாணவர்களுக்கு தங்கள் பாடங்களை இணையத்தில் விளம்பரம் செய்கிறார்கள்

இந்த தந்திரம் ஒரு சுழற்சியைப் போல் செயல்படுகிறது உங்களை பயன்படுத்தி மறுபடியும் புதிய மாணவர்களை சேர்ப்பது.

இவர்கள் சமூகத்தின் வேலை வாய்ப்பின்மை  சூழலை  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இணையத்தில் கற்பிக்கப்படும் பெரும்பாலான பாடங்களில்  கற்றுக் கொடுக்கப்படும் திறன்களை நிஜ உலகில் எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் செயல்படுத்துவது என்று  காண்பிக்கப்படுவதில்லை.

எந்த பாடத்தை படித்தாலும், திறன்களை கற்றுக் கொண்டாலும் அதை நிஜ உலகிற்கு அல்லது செயல்பாட்டில் இருக்கும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்றது போல் நீங்கள் பயன்படுத்தும்போது தான் அதில் உள்ள சாதக பாதகங்கள் புரியும். அதுதான் நிஜ அனுபவம்.

இன்று இணையவாசிகளை ஏமாற்ற புதிதாக இரண்டு யுக்திகளை கையாளப்படுகின்றன. அந்த யுக்தி தனிநபர் அல்லது ஒரு நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றது

அவற்றை நாம்  தேடுபொறி தொழில்நுட்ப மோசடி மற்றும் போலியாக பெறப்படும் மதிப்புரை மோசடி என்று அழைக்கலாம்


தேடுபொறி தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக மதிப்புரை மோசடி


Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x