அல்பெண்டசோல் மாத்திரை

5/5 - (1 vote)

அல்பெண்டசோல் புழு மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து ஆகும்

 • இது ஒட்டுண்ணி புழு தொற்றின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது
 • இது நோய்த்தொற்றுகளை உண்டாக்கும் புழுக்களை அழித்து தொற்று பரவாமல் தடுக்கிறது
 • இந்த மருந்து நாடாப்புழு (tapeworm) நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது

அல்பெண்டசோல் மாத்திரை பயன்கள்


அல்பெண்டசோல் மாத்திரையை எவ்வாறு எடுத்துக்கொள்வது

உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்பதற்கு முன் அல்லது பின் அல்பெண்டசோல் மாத்திரையை எடுத்துக்கொள்ளவும்

ஒரு கிளாஸ் தண்ணீருடன் மாத்திரையை முழுவதுமாக விழுங்கவும், மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ வேண்டாம்


அல்பெண்டசோல் எவ்வாறு வேலை செய்கிறது

அல்பெண்டசோல், உங்கள் உடம்பில் இருக்கும் சர்க்கரையை (glucose) புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் உறிஞ்சுவதைத் தடுத்து, அவற்றின் ஆற்றலை குறைக்கிறது.

இவ்வாறு ஒட்டுன்னிகளை அழித்து தொற்றுக்கு சிகிச்சையளிக்கிறது


கர்ப்ப கால தொடர்பு

கர்ப்ப காலத்தில் அல்பெண்டசோல் மாத்திரைகளைப் பயன்படுத்துவது பிறக்காத குழந்தைக்கு பாதுகாப்பானது அல்ல

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அல்பெண்டசோல் மாத்திரையைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல, சரியான சிகிச்சையைப் பெற உங்கள் மருத்துவரை அணுகவும்.


அல்பெண்டசோல் மாத்திரையின் பக்க விளைவுகள்

 • வயிற்று வலி
 • தலைவலி
 • வாந்தி
 • தலைசுற்றல்
 • கல்லீரல் நொதிகள் அதிகரிப்பு
 • குமட்டல்
 • பசியிழப்பு

பாதுகாப்பு

 • நீங்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளத் தொடங்குவதற்கு முன் உங்கள் இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் கல்லீரல் செயல்பாட்டை உங்கள் மருத்துவர் சரிபார்க்கலாம். சிகிச்சையின்போது தொடர்ந்து கண்காணிக்கலாம்
 • ஒட்டுண்ணி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தொற்றுநோய்கள் உள்ளவர்கள் அருகில் இருப்பதைத் மற்றவர்கள் தவிர்க்க வேண்டும்
 • நோய்த்தொற்றின் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்
 • உங்கள் உடல் மீண்டும் ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றினாலும் உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை எடுத்து கொள்ளுங்கள், நிறுத்தினால் அது மீண்டும் தொற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்

தற்காப்பு நடவடிக்கைகள்

 • அல்பெண்டசோல் எதுத்துக்கொள்ளும்போது மது அருந்துவது பற்றி போதிய தகவல் இல்லை, உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்
 • நீங்கள் எப்போதாவது ஒரு முறை மருந்தளவை தவறவிட்டால் கூடிய விரைவில் அதனை எடுத்துக் கொள்ளுங்கள், மருந்தளவை இரண்டு மடங்கு எடுத்துக்கொள்ளாதீர்கள், தவறிய மருந்தளவைத் தவிர்த்துவிட்டு, பரிந்துரைக்கப்பட்டபடி உங்கள் வழக்கமான அட்டவணையைப் பின்பற்றவும்.
 • அல்பெண்டசோல் மருந்தை உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தால் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உங்கள் மருத்துவரை அணுகவும்.

கீழ்வரும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டால், அல்பெண்டசோல் மாத்திரையை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்

 • ஆன்தெல்மிண்டிக் (வேறு ஒட்டுண்ணி எதிர்ப்பு ஆண்டிபயாடிக் மருந்துகள்)
 • கார்டிகோஸ்டீராய்டு (அழற்சி, வீக்கம் எதிர்ப்பு மருந்து வகை)
 • ஆன்டாசிட் (அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் நிவாரணி மருந்து)
 • ஆஸ்துமா எதிர்ப்பு மருந்துகள்

மருந்து நோய் தொடர்பு

 • சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்கள் உள்ள நோயாளிகள் இந்த மருந்தை உட்கொள்ளும் முன் தங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
 • எலும்பு மஜ்ஜை ஒடுக்கம் (myelosuppression), கல்லீரல் மற்றும் பித்த நோய் (hepatobiliary dysfunction), நரம்பியல் கோளாறு மற்றும் சிறுநீரக செயலிழப்பு நோய்கள் உள்ள நோயாளிகள் இந்த மருந்தை எடுப்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவித்து அவர் ஆலோசனையை பெற வேண்டும்

விவரங்கள்

 • இரசாயன வகுப்பு: 2-பென்சிமிடாசோலைல்கார்பமிக் அமில எஸ்டர்கள்
 • போதை மருந்து : இல்லை
 • சிகிச்சை வகுப்பு : தொற்று எதிர்ப்பு
 • அட்டவணை “எச்” பரிந்துரைக்கப்பட்ட மருந்து : பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் சமீபத்திய முறையான பரிந்துரை இல்லாமல் இந்த மருந்தை சில்லறை மருத்துவக் கடைகள் அல்லது ஆன்லைன் மருந்தகங்களில் விற்கக்கூடாது.
 • ஒளி மற்றும் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட மருந்தை வைக்கவும்
 • குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்

எந்தவொரு உடல்நலம், மருத்துவ நிலை, நோயறிதல் அல்லது சிகிச்சை குறித்து எப்போதும் மருத்துவரை அணுகவும்.

உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள், இந்தத் தளத்தில் நீங்கள் பார்த்த அல்லது படித்தவற்றின் காரணமாக அதைப் புறக்கணிக்காதீர்கள்.

Share
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x